தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – 185 பணியிடங்களுக்கான முக்கிய விவரங்கள்

Tamilnadu Civil Supplies Corporation recuritment Notification: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பணியிடம் பணியாற்றிட தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பணியிடம் பணியாற்றிட தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ” தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ( நெல் கொள்முதல் பருவத்தில் மட்டும்) பட்டியல் எழுத்தர் 62, உதவியாளர் 72 மற்றும் காவலர் 51 பணியாற்றிட பணியிடத்திற்கு பணியாளர்கள் ( ஆண்கள் மட்டும்) நியமனம் செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இடஒதுக்கீடு முறையில் 2020ம் ஆண்டு 31.12.2020  அன்று பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிறபடுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ( முஸ்லிம் )  18 வயது முதல் 32 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ( அருந்ததியினர்) 18 வயது முதல் 35 வயது வரை விண்ணபிக்கலாம்.

கல்வித் தகுதி:  எழுத்தருக்கு B.sc (Biology) மற்றும்  B.sc Non Biology , உதவியாளருக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் காவலர் பணிக்கு எட்டாம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விபரம்:

பட்டியல் எழுத்தர் – Basic ரூ. 2410 , DA- ரூ. 4049
உதவியாளர் காவலர் – ரூ.2359 –  DA-ரூ. 4049                  காவலர் – Basic  ரூ.2359 –  DA- ரூ. 4049

 

NEET 2021: கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் எவை?

தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களுடன் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சச்சிதானந்த மூப்பனார் சாலை, தஞ்சாவூர் – 613001 என்ற முகவரியுள்ள அலுவலகத்தில், சான்றோப்பமிடப்பட்ட கல்வித்தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியற்றுடன் 28-01-2021- க்குள் நேரிலோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரப்பெற்ற வின்னபங்களில் அரசு/ கழக விதிகளின் படி தகுதியுடைய நபர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu civil supplies coporation job notification 2021 eligibility important dates

Next Story
NEET 2021: கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் எவை?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com