scorecardresearch

Tamil Nadu 10th, 12th Results Date: தமிழ்நாடு 10, 12-ம் வகுப்பு ரிசல்ட் எப்போது? இந்த வெப்சைட்களை செக் பண்ணுங்க!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ரிசல்ட் எப்போது வெளியிடப்படும்? முடிவுகளை எப்படி தெரிந்துக் கொள்வது?

Class 10 Exams
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் (TNDGE) 12ஆம் வகுப்பு முடிவை மே 8, 2023 அன்று வெளியிடவுள்ளது. தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே 8 ஆம் தேதி காலை செய்தியாளர் சந்திப்பில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 09:30 மணிக்கு வெளியிடுகிறார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்றன. இந்த தேர்வின் முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால், நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளதால், நீட் தேர்வுக்குப் பிறகு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படியுங்கள்: CBSE Class 12 Results: சி.பி.எஸ்.இ பிளஸ் டூ ரிசல்ட் எப்போது? செக் செய்வது எப்படி?

இந்தநிலையில், மாணவர்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 8 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12 ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவுகள் 08.05.2023 அன்று அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரிகளிலும் தெரிந்துக் கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.gov.in

தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மேற்கண்ட இணையதளப் பக்கங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதியையும், தேர்வு முடிவுகளையும் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu class 10 12 exam results date and how to check