Tamilnadu District courts invites application for 1412 posts apply soon: சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1412 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், இளநிலை கட்டளை பணியாளர், முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், மின் தூக்கி இயக்குபவர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNPSC; தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!
நிரப்பப்படும் பதவிகள்
நகல் பரிசோதகர் (Examiner)
நகல் வாசிப்பாளர் (Reader)
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff)
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)
கட்டளை பணியாளர் (Process Server)
கட்டளை எழுத்தர் (Process Writer)
ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)
மின் தூக்கி இயக்குபவர் (Lift Operator)
ஓட்டுனர் (Driver)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1412
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியாக காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் நீதிமன்ற இணையத்தளப் பக்கம் மூலமாக காலியிட விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.
கல்வித் தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒளிப்பட நகல் எடுப்பவர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு முன் அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST 5 ஆண்டுகளும், MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்
நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஓட்டுனர் பணியிடங்களுக்கு ரூ. 19,500 – 71,900
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், கட்டளை பணியாளர் ரூ. 19,000 – 69,900
ஒளிப்பட நகல் எடுப்பவர் ரூ. 16,600 – 60,800
மின் தூக்கி இயக்குபவர் ரூ. 15,900 – 58,500
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 50 வினாக்கள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 20 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.
இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவு மற்றும் கணிதப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதற்கான கால அளவு 2 ½ மணி நேரம்.
தேர்வுக் கட்டணம் : ரூ. 550, இருப்பினும் SC, SC(A), ST, மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2022
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.