scorecardresearch

TNEA 2022: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; விண்ணப்பம் செய்வது எப்படி?

TNEA 2022 registration process has started online from today: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022; தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? கடைசி தேதி எப்போது?

Tamilnadu Engineering Admission 2022 How to apply online: தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 19 என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இன்று (ஜூன் 20) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பொறியியல் படிப்புகளின் சேர்க்கைக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: 10th, 12th Results: அரசுப் பள்ளிகள் அபாரம்; திருச்சி தேர்ச்சி நிலவரம்!

பொதுப் பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும், இதர இடஒதுக்கீட்டு பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முதலில் https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அந்த பக்கத்தில் Click here for B.E/B.Tech என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

கிளிக் செய்த பின் தோன்றும் பக்கத்தில் விண்ணப்பதாரரின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும்.

அடுத்ததாக, கடவுச்சொல்லை அறிவிப்பில் குறிபிட்டுள்ள வகையில் உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு பயனர் ஐடி வழங்கப்படும். அதனைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பச் செயல்முறையை தொடங்க வேண்டும்.

இதில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், முகவரி போன்றவற்றை உள்ளிட்டு சேமித்துக் கொள்ளவும்.

சிறப்பு பிரிவுக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், அதற்கான விவரங்களை உள்ளிட வேண்டும். அடுத்ததாக உதவித் தொகை தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.

பின்னர் பள்ளி மற்றும் பிற படிப்பு தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை நன்றாக சரிபார்த்து சேமித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது நீங்கள் கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனையும் நீங்கள் ஆன்லைன் வாயிலாகவே செலுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவு : ரூ. 500, SC/SCA/ST பிரிவுகளுக்கு ரூ. 250, சிறப்பு பிரிவினருக்கு ரூ.100

இறுதியாக விண்ணப்பத்தினை சமர்ப்பித்தப்பிறகு உங்களுக்கு விண்ணப்ப எண் உடன் கூடிய விண்ணப்ப படிவம் கிடைக்கப் பெறும், அதனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை தொடங்கும் நாள் : 20.06.2022

விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.07.2022

சான்றிதழ் சரிபார்ப்பு : 20.07.2022 – 31.07.2022

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu engineering admission 2022 how to apply online