Tamilnadu Engineering Counselling 2022 Overall rank vs Communal rank which is important?: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒட்டுமொத்த தரவரிசை முக்கியமா அல்லது சாதிப் பிரிவு அடிப்படையிலான தரவரிசை முக்கியமா என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை விரைவில் முடிவடைய உள்ளது. அதன் பின்னர் ரேண்டம் எண் வழங்கப்படும். அதற்கு அடுத்தப்படியாக, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்ட தரவரிசை வெளியிடப்படும். இந்த தரவரிசையில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதில் விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த தரவரிசை (Overall rank) மற்றும் சாதிப்பிரிவு அடிப்படையிலான தரவரிசை (Communal rank) இடம்பெற்றிருக்கும்.
இந்தநிலையில், இரண்டில் எது முக்கியம், எது மாணவர்களுக்கு உதவக் கூடியது என்பதை கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
ஒட்டுமொத்த தரவரிசை என்பது விண்ணப்பதாரர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மேலிருந்து கீழாக தரவரிசைப்படுத்தப்பட்டதாகும். இதன் அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடைபெறும்.
சாதிப்பிரிவு அடிப்படையிலான தரவரிசை என்பது, குறிப்பிட்ட சாதிப்பிரிவில் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மேலிருந்து கீழாக தரவரிசைப்படுத்தப்பட்டதாகும். இதில் ஒவ்வொரு சாதிப்பிரிவினர்களுக்குள் மட்டுமே தரவரிசை இருக்கும். இது கவுன்சலிங்கின் போது குறிப்பிட்ட சாதிப்பிரிவுக்கு ஒதுக்கட்ட இடங்களை பெற உதவும். மேலும், இந்த தரவரிசை எண், ஒட்டுமொத்த தரவரிசை எண்ணை விட குறைவாக வரும்.
இந்த இரண்டு தரவரிசைகளில் சாதி அடிப்படையிலான தரவரிசையே முக்கியமானது. ஏனெனில், அதில் உங்கள் தரவரிசையைப் பொறுத்து, உங்கள் பிரிவுக்கான இடஒதுக்கீட்டு இடங்களில், எந்தக் கல்லூரியில் எந்த படிப்பு கிடைக்கும் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil