தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் 1895 விரிவுரையாளர் காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் 1895 விரிவுரையாளர் காலியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்!

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் 1895 விரிவுரையாளர் காலியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
tet

தமிழகத்தில் 10000 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு; விரைவில் அறிவிப்பு வெளியாகும்

தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய தமிழக முடிவு எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பிங்க!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிகெய்யும் நோக்கிலும், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மான்யக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிடமிருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பித்தினை https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2022 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை அறிய https://www.tngasa.in/pdf/GL%201895%20advertisement%2015_12_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: