Advertisment

3,147 புதிய பணியிடங்கள்; 20 மாநகராட்சிகளில் உருவாக்க தமிழக அரசு உத்தரவு

சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப, 3,147 புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப, 3,147 புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளார் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: MBBS Counselling 2022: தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,

சென்னை மாநகராட்சியைத் தவிர்த்து, இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படும்போது, புதிய பணியிடங்களை உருவாக்குவது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சிகளில் வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களை மறுசீரமைத்தல் தொடர்பான வரையறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாநகராட்சியும் நான்கு பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர் பிரிவு, வருவாய் மற்றும் கணக்குப் பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீா் வழங்கல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு ஆகிய பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குநரின் சார்பில், அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் தமிழ்நாட்டிலுள்ள 20 மாநகராட்சிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களைத் தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைத்து முறைப்படுத்துவது தொடர்பாகவும் சில விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இப்போது மொத்தமுள்ள 20 மாநகராட்சிகள் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சிகளின் இப்போதைய நிலவரப்படி மக்கள்தொகைக்கு ஏற்றவாறு மாநகராட்சி பணியிடங்கள் ஒரே சீராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையைத் தவிர்த்து, பிற மாநகராட்சிகளில் 2021 ஆம் ஆண்டு தோராய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 829 மக்கள் உள்ளனர். இவற்றில் சிறப்பு நிலை நகராட்சிகளில் இருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி, திருப்பூா், நாகா்கோவில், ஓசூா், திண்டுக்கல், தஞ்சாவூா் முதலிய மாநகராட்சிகளில் சில சிறப்பு நிலை நகராட்சிகளில் காணப்படும் பணியிடங்களுக்கும் குறைவான பணியிடங்களே உள்ளன

மேலும், புதிய மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூா், காஞ்சிபுரம், சிவகாசி, கரூா், கும்பகோணம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் போதுமான பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.

இதற்காக மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மதுரை, கோவை, திருப்பூா், சேலம், திருச்சி, தாம்பரம் ஆகியன சிறப்பு நிலை –’அ’ மற்றும் ’ஆ’ என வகைப் படுத்தப்பட்டுள்ளன. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வரையிலான மக்கள்தொகை கொண்ட திருநெல்வேலி, ஈரோடு, வேலூா், தூத்துக்குடி, ஆவடி ஆகியன தோ்வுநிலை மாநகராட்சிகளாகவும், 3 முதல் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட தஞ்சாவூா், ஓசூா், நாகர்கோவில் ஆகியன தேர்வு நிலை 1 மாநகராட்சிகளாகவும், 3 லட்சத்துக்குக் குறைவாக உள்ள திண்டுக்கல், கடலூா், காஞ்சிபுரம், சிவகாசி, கரூா், கும்பகோணம் ஆகியன தேர்வுநிலை 2 மாநகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநகராட்சிகளில் புதிதாகத் தோற்றுவிக்கப்படவுள்ள பணியிடங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள பணியிடங்களைச் சீரமைத்து முறைபடுத்தும் பொருட்டு புதிய பணியிடங்கள் அனுமதிக்க நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது பரிந்துரைகளை ஏற்று பணியிடங்களின் வரையறை மற்றும் ஏற்கெனவே உள்ள பணியிடங்களை முறைபடுத்தி மொத்தம் 3,417 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான செலவினத்தை அந்தந்த மாநகராட்சியின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment