ரேசன் கடை வேலை வாய்ப்பு; 4000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

நியாய விலைக்கடைகளில் சுமார் 4000 காலியிடங்கள்; மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு

நியாய விலைக்கடைகளில் சுமார் 4000 காலியிடங்கள்; மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMGKAY

Bihar Kerala and Uttar Pradesh will not receive any wheat for free distribution under the PMGKAY

நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…

Advertisment

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின் படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: தமிழக ஊர்க்காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisment
Advertisements

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் அமைக்கப்படும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவிற்கான சரிபார்ப்புக்குழுவில் மாவட்ட வழங்கல் அலுவலரால் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலரும் உறுப்பினராக வரவுள்ளதால், அலுவலர் மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தின் சரிபார்ப்புக்குழுவின் பணிகளில் முழுமனதோடு ஈடுபட்டு ஒத்துழைக்க ஏதுவாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சரிபார்ப்பு பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 4000 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னராக இத்தேர்வு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக் கூடும் என்பதால், தேர்வு நடவடிக்கைகளை எந்த புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும். தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளில் இருந்து 90 நாட்களுக்கு முன்னரும் காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களில் இருந்து பெற வேண்டும்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசுப் பணிகளுக்குப் பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பான நடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள் ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நியாய விலைக்கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி (பிளஸ்-2) பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி அல்லது 10 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: