தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை தமிழக அரசு மாற்றியமைக்க உள்ளது.
தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஐ.டி.ஐ எனப்படும் தொழிற்கல்வி படிப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: மாணவர்கள் இடையே பாகுபாடு காட்டினால் கடும் நடவடிக்கை: அன்பில் மகேஷ் எச்சரிக்கை
இதைத் தொடர்ந்து தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பொதுப் பாடத்திட்டத்தை தமிழக அரசு மறுசீரமைக்க உள்ளது.
கலை மற்றும் அறிவியல் பாடங்களில் தற்போதுள்ள பாடத்திட்டம் காலாவதியானது மற்றும் தொழில்துறைகளின் தேவைகளுக்கு இணையாக இல்லை என்ற கல்வியாளர்களின் பல பரிந்துரைகளின் பின்னணியில் உயர்கல்வித் துறையின் பாடத்திட்டம் மாற்றும் நடவடிக்கை வந்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்ட முறை பல ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. இந்தப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் வேலை வாய்ப்பில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர், என்று உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தேசிய சராசரியான 27.1% இல் இருந்து மாநிலத்தின் மொத்த சேர்க்கை விகிதம் 51.4% ஆக அதிகரித்திருந்தாலும், பாடத்திட்டம் காலாவதியாகிவிட்டதால், வேலை தேடும் மாணவர்களுக்கும், கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மறுசீரமைக்க கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும், என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக வரைவு பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும். உண்மையான கருத்துக்களை பரிசீலித்த பிறகு, இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் முன் வரைவு பாடத்திட்டம் மேலும் மாற்றியமைக்கப்படும்.
இறுதியாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றிய பின், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அறிவியல் பாடங்களில் நடைமுறை தேர்வுக்கு (Practical) முன்னுரிமை அளிக்கப்படும்.
பல்வேறு மாவட்டங்களில் 25 கோடி ரூபாய் செலவில் 2022-2023 ஆம் ஆண்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தக் கல்லூரிகள் புதிய பாடத்திட்டத்துடன் தொடங்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil