Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!

தமிழக சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; முதுநிலை டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn govt jobs

tn govt jobs

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: TNSTC Jobs; அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

Assistant Research Officer (Chemistry)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : M.Sc., Chemistry படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : பொதுப் பிரிவினர் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். BC, MBC & DNC பிரிவினர் 34 வயதிற்குள்ளும், SC, SCA, ST பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

Assistant Research Officer (Microbiology)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc., Microbiology படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : பொதுப் பிரிவினர் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். BC, MBC & DNC பிரிவினர் 34 வயதிற்குள்ளும், SC, SCA, ST பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

Assistant Research Officer (Bio-Chemistry)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc., Bio-Chemistry படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : பொதுப் பிரிவினர் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். BC, MBC & DNC பிரிவினர் 34 வயதிற்குள்ளும், SC, SCA, ST பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு முதுநிலைப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N23043967.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி : Chief Scientific Officer/Director, Research and Development Wing for ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 (Opposite to siddha Men’s Hostel)

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N23043967.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment