scorecardresearch

11, 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுத் தேதிகள் அறிவிப்பு

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி முதல் 10 தேதி வரை நடைபெறும் – பள்ளிக் கல்வித்துறை

11, 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுத் தேதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தலா 8 லட்சம் மாணவ, மாணவிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பொதுத் தேர்வின் ஒரு பகுதியான செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்: JEE Mains 2023: கட்டாயம் படிக்க வேண்டிய கணித பாடத் தலைப்புகள்

இந்தநிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 7 ஆம் தேதி முதல் 10 தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu hsc practical exams 2023 dates announced

Best of Express