பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது – பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிமுறைகள்

exam
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் தொடங்க உள்ள நிலையில், தேர்வு நாளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3, 2023 வரை நடத்தப்படும். அதே சமயம் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5, 2023 வரை நடைபெறும். 8.8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் மார்ச் 13 முதல் பொதுத் தேர்வுகள் ஆரம்பம்; ஏற்பாடுகள் தீவிரம்

தேர்வு காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படிக்க கொடுக்கப்படும்.

மாணவரின் விவரங்கள் சரிபார்ப்பு காலை 10:10 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளப்படும். தேர்வு காலை 10:15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும்.

தேர்வு நாள் வழிமுறைகள்

கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.

உங்கள் அனுமதி அட்டை (ஹால் டிக்கெட்) மற்றும் பள்ளி அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லவும்.

மாணவர்கள் அந்தந்த பள்ளி சீருடையில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

வாரியத்தால் குறிப்பிடப்பட்ட உங்கள் சொந்த பேனா மற்றும் பிற எழுதுபொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.

மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.

தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu hsc sslc exams guidelines for class 101112 students

Exit mobile version