தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை இன்று முதல் (செப்டம்பர் 22) தொடங்கியுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை இன்று முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 03.10.2022 ஆகும்.
இதையும் படியுங்கள்: கலை, அறிவியல் படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்; தமிழக அரசு முடிவு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். இதற்கு https://ugreg22.tnmedicalonline.co.in/mbbs22/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கலந்தாய்வு மற்றும் சேர்க்கை தொடர்பான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும், என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என தெரிகிறது.
இந்த விண்ணப்பச் செயல்முறை தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22093621.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil