scorecardresearch

NEET UG Expected Cut Off 2022: தமிழகத்தின் 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு கோட்டா கட் ஆஃப் எவ்வளவு?

Tamilnadu MBBS Counselling 2022: தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு; தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்?

Exam

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும்? தமிழகத்தில் உள்ள 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட் ஆஃப் எவ்வளவு? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) தேசிய தேர்வு முகமை (NTA) இன்று ஜூலை 17-ஆம் தேதி நடத்தியது. அதற்கான முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: MBBS Counselling 2022: தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்; கட் ஆஃப் எப்படி இருக்கும்?

இந்தநிலையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வு தற்போது தொடங்கியுள்ளது. 19 ஆம் தேதி தொடங்கியுள்ள முதற்கட்ட கவுன்சலிங் 25 ஆம் தேதி வரை நடைபெறும். அதாவது அதுவரை சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம். 27 மற்றும் 28 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 30 ஆம் தேதி முதற்கட்ட கவுன்சலிங் முடிவுகள் வெளியிடப்படும்.

இந்தநிலையில், கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில், தமிழகத்தில் உள்ள 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என விளக்கியுள்ளார்.

கட் ஆஃப் எப்படி இருக்கும்?

நீட் தேர்வு கட் ஆஃப் மதிப்பெண்களை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு, இந்த ஆண்டு எவ்வளவு இருக்கும் என நாம் பார்க்கலாம். இந்த ஆண்டு 2022ல் தமிழ்நாடு கவுன்சிலிங்கில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு என்பதை இப்போது பார்ப்போம்.

அரசு மருத்துவ கல்லூரிகள்:

OC – 581

BC – 527

BCM -503

MBC – 497

SC – 408

SCA – 355

ST – 308

தனியார் மருத்துவ கல்லூரிகள்:

OC – 510

BC – 477

BCM -471

MBC – 456

SC – 357

SCA – 276

ST – 265

தமிழகத்தில் உள்ள 18 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்குமான தனித் தனி கட் ஆஃப் விவரங்களையும் கல்வியாளர் அஸ்வின் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவுக்கான கட் ஆஃப் 560 ஆக உள்ளது. சேலம் அன்னபூர்னா மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவினருக்கான கட் ஆஃப் 545 ஆக உள்ளது. இதேபோல் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும், ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவுக்கான எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu mbbs counseling 2022 private medical colleges cut off details in tamil