Tamilnadu MRB recruitment 2022 for 889 Pharmacist jobs Apply soon: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 30.08.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மருந்தாளுனர் (Pharmacist)
Advertisment
Advertisement
காலியிடங்களின் எண்ணிக்கை : 889
கல்வித் தகுதி : Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ST / SCA/ SC/MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும்.
முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 40% மதிப்பெண்கள், அதாவது 20 மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். இல்லை என்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இதற்கான கால அளவு 1 மணி நேரம்.
இரண்டாம் பகுதி, மருந்தியல் பாடங்களில் இருந்து 100 வினாக்களுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300