தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய கண் சிகிச்சை உதவியாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 23.02.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: காரைக்குடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Ophthalmic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 93
கல்வித் தகுதி : Ophthalmic Assistant course or Diploma in Optometry படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.03.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/Ophthalmic_Assistant_notification_170223.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil