scorecardresearch

தமிழ்நாடு காவல் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

தமிழ்நாடு காவல்துறையின் குதிரைப் படைப் பிரிவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Tamil Nadu Police Department 621 SI Posts Notification
தமிழ்நாடு போலீசில் 621 உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு காவல்துறையின் குதிரைப் படையில் குதிரை பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழக போலீஸ் வேலைக்கு ரெடியா? 2,599 காவலர்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு

குதிரை பராமரிப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி: தமிழில் எழுதவும், படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: பொதுப் பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு வெள்ளைத் தாளில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களை எழுதி பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம், காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை பெருநகர காவல், வேப்பேரி, சென்னை – 7.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.04.2023

சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெறும் நாள்: 17.04.2023

இடம்: ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ருக்மணி லட்சுமிபதி சாலை (மார்ஷல் சாலை), எழும்பூர், சென்னை – 8.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu police recruitment 2023 for horse maintainer jobs apply soon