தமிழக அரசு வேலை… எழுத்துத் தேர்வு இல்லை… நிறைய பணியிடங்கள்… கடைசி தேதி இதுதான்!

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு; 500 பணியிடங்கள்; டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

tn pwd jobs
பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளதால், டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: அரசு வேலை வாய்ப்பு; 15000 பணியிடங்கள்; விண்ணப்பிக்க ரெடியா?

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை – 355

Civil Engineering – 315

Electrical and Electronics Engineering – 25

Architecture – 15

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 9,000

Technician (Diploma) Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை  – 145

Civil Engineering – 115

Electrical and Electronics Engineering – 25

Architecture – 5

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 8,000

வயது தகுதி: 31.10.2022 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் PUBLIC WORKS DEPARTMENT TAMILNADU என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/02/PWD_Notification_2023-24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu public works department pwd jobs 2023 for 500 apprentices vacancies apply online

Exit mobile version