scorecardresearch

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு செயலி வருகை பதிவு; பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் செயலி மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு செயலி வருகை பதிவு; பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Tamilnadu school education department introduce app based attendance for teachers and students: பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் செயலி மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை முதல் செயலி மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்: மீண்டும் திரும்புகிறது இன்ஜினியரிங் மோகம்: முதல் முறையாக 2 லட்சம் விண்ணப்பங்கள்!

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 1) முதல் செயலி மூலம் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் பள்ளிக் கல்வித்துறையின் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள், பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu school education department introduce app based attendance for teachers and students

Best of Express