Advertisment

TN 10th Results Date: தமிழ்நாடு 10-ம் வகுப்பு ரிசல்ட் தேதி அறிவிப்பு; செக் செய்வது எப்படி?

தமிழ்நாடு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? தெரிந்துக் கொள்வது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10th Public Exam, Tiruchirappalli students presents and absents details, 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு, திருச்சியில் இவ்வளவு பேர் ஆப்சன்ட், Tiruchirappali 10th Public Exam, Tiruchirappalli students presents and absents details

10-ம் வகுப்பு தேர்வு

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20, 2023 வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. மேலும் மே 17 ஆம் தேதி வெளியிடப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் தேர்வுத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதையும் படியுங்கள்: 100-க்கு 138 மதிப்பெண்: அதிர்ச்சி அளித்த  பிளஸ் 2 மாணவி மார்க்

இதனையடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி எப்போது என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வதற்கான படிகள் இங்கே:

படி 1: தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத்தின் (TNBSE) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://dge.tn.gov.in/result.html அல்லது https://tnresults.nic.in/

படி 2: "TN Board Exam Results 2023" என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: வழங்கப்பட்ட விருப்பங்களிலிருந்து தொடர்புடைய தேர்வைத் தேர்ந்தெடுக்கவும், அதாவது 10 ஆம் வகுப்பு

படி 4: இப்போது உங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.

படி 5: "சமர்ப்பி" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 6: முடிவு திரையில் காட்டப்படும்.

படி 7: முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும்.

படி 8: பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

School Exam Sslc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment