ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் (TET) தேர்வில் 2 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதில் பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: 12-ம் வகுப்பு கணித தேர்வு; கூடுதல் மதிப்பெண் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
இந்தநிலையில், அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த ஆசிரியர் தகுதி தேர்வின் 2 ஆம் தாள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாள் தேர்வை எழுத 4,01,986 பேர் பதிவு செய்த நிலையில் 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளது, கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil