/tamil-ie/media/media_files/uploads/2023/04/exam-college.jpg)
Tamil News Updates
TANCET 2023 விடைக்குறிப்பு: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (TANCET) விடை குறிப்பை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu-க்கு சென்று விடைக்குறிப்பை சரிபார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைந்து விடைக்குறிப்பை சரிபார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு நெட், ஸ்லெட் தேவை இல்லை; அண்ணா பல்கலை. தளர்வு
TANCET 2023: விடைக்குறிப்பை பதிவிறக்குவதற்கான படிகள்
படி 1: TANCET அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — https://tancet.annauniv.edu/tancet/index.html
படி 2: முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘விடைக் குறிப்புகள் 2023’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: மின்னஞ்சல் ஐ.டி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா போன்ற உங்கள் உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
படி 3: உங்கள் உள் நுழைவு சான்றுகளை வெற்றிகரமாக உள்ளிட்ட பிறகு, விடைக் குறிப்பு உங்கள் திரையில் தெரியும்.
படி 4: எதிர்கால குறிப்புக்காக விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும்.
TANCET 2023 மார்ச் 25 அன்று நடத்தப்பட்டது. இந்த தேர்வை எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.