TANGEDCO Recuritment: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜனவரி மாதம் 1300 கணக்கீட்டாளர் பணிக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டது. இதற்கான கல்வித்தகுதி கலை, அறிவியல், வணிகவியல் போன்ற பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
Advertisment
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் வரும் மார்ச்-23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் , இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் , தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், தமிழ் மீடியம் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆங்கிலத்தில் மட்டும் ஆன்லைன் தேர்வு நடத்துவது குறித்து மு.க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ர தேர்வுகளில் நெகட்டிவ் மதிப்பெண் வழங்கும் முறை இருப்பதால், ஆங்கிலத்தில் கேள்வி புரியாத பல தேர்வர்கள் புறகணிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், ஆன்லைன் தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்போவதாக டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு உதவும் வகையில், ஆன்லைன் தேர்வு தமிழிலும் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .