தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார இயக்க மேலாளர் (Block Mission Manager) மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் 15.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: விமானப் படையில் சேர ஆசையா? உடனே விண்ணப்பியுங்கள் – திருச்சி ஆட்சியர்
வட்டார இயக்க மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 28 வயதுக்குள் மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 16
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 28 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.02.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2023/01/2023013082.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.