ஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு : அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும். தேர்வு ஜூன் 27/28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

Teachers Recruitment Board Tentative Annual Planner : ஆசிரியர் தேர்வு வாரியம் 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. இது வாரியத்தின் தற்காலிக அட்டவணை என்றாலும், தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

மேலும், இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள  காலியிடங்கள் தற்காலிகமானவை. நோட்டிபிகேஷன் வெளியிடும்போது  அல்லது இறுதி தேர்வுக்கு முன் காலியிடங்களின் எண்ணிக்கை மாற்றப்படலாம்.

<strong>விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..</strong>

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Mg7yzxPKiKA&#8221; frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் தேவையான வரைமுறை  மற்றும் பாடத்திட்டங்கள் trb.in.nic.in  என்ற இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும்.

 

2020-21 ஆசிரியர் தகுதித் தேர்வு:   2020-21 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27/28 ஆகிய தேதிகளில் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும். இதற்கான காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

24ம் தேதி சென்னையில் அரசு வேலைவாய்ப்பு முகாம்: 8ம் வகுப்பு அடிப்படை தகுதி

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி:   அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 1060 விரிவுரையாளர் பணிக்கான தேர்வு மே மாதம் இரண்டு,மூன்று ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ நோட்டிபிகேஷன் கடந்த மாதம் செப்டம்பர் மாதம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

இடைநிலை ஆசிரியர் பணி :  2016-2017 முதல் 2019-2020 வரைக்கான இடைநிலை ஆசிரியர் பணிக்கான அதிகாரப்பூர்வ நோட்டிபிகேஷன் ஜூலை 9ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 730  காலியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்

முதுநிலை ஆசிரியர் பணி:  முதுநிலை ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு ஜூலை ஒன்றாம் தேதி வெளியாகும். 497 காலியிடங்கள் கொண்ட முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

பட்டதாரி ஆசிரியர் பணி:  பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு ஜூலை 17ம் தேதி வெளியாகும். 572 காலியிடங்கள் கொண்ட பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு  விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tentative annual planner of teachers recruitment board for the year 2020

Next Story
24ம் தேதி சென்னையில் அரசு வேலைவாய்ப்பு முகாம்: 8ம் வகுப்பு அடிப்படை தகுதிChennai job Fair on jan.24
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com