தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெறும். 11ஆம் வகுப்பு தேர்வு மே 9 இல் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்பு மே 5 இல் தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
12 ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 25 தொடங்கி மே 2 –ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெறும்.
11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வும் ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெறும்.
பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வும் ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெறும்.
12-ஆம் வகுப்புக்கு ஜூன் 23 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. 11-ஆம் வகுப்புக்கு ஜூலை 7-ஆம் தேதியும், 10ஆம் வகுப்புக்கு ஜூன் மாதம் 11-ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு முடிவு அறிவிப்பு தேதி மாறக் கூடிய வாய்ப்புள்ளது. அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பபோ அல்லது பின்னரோ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4: 5000 காலிப் பணியிடங்கள்; புது சிலபஸ்; டி.என்.பி.எஸ்.சி தலைவர் முக்கிய அறிவிப்பு
https://tntp.tnschools.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற வலைதளங்களில் எந்தெந்த தேதியில் எந்தெந்த பாடத்துக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும்.
மாணவர்கள் அதில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தேர்வுகள் முடிந்த பிறகு, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் +2 மாணவர்களுக்கான வழக்கமான வகுப்புகள் 20.06.2022 முதல் தொடங்கப்படும். +1 படிக்கும் மாணவர்களுக்கான வழக்கமான வகுப்பு 24-6-2022 அன்று முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
06.05.2022 மொழித்தாள்
14.05.2022 விருப்ப மொழித்தாள்
18.05.2022 ஆங்கிலம்
21.05.2022 தொழிற்கல்வி பாடங்கள்
24.05.2022 கணிதம்
26.05.2022 அறிவியல்
30.05.2022 சமூக அறிவியல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil