Thiruvannamalai Health department jobs 2022 apply soon, சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! | Indian Express Tamil

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: ஆவின் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor of Physiotherapy (BPT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

Account Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Com Degree with Tally படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000

Sector Health Nurse/Urban Health Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc. Nursing in Community Health / Paediatrics /Obstetrics & Gynacology படித்திருக்க வேண்டும். அல்லது B.Sc. Nursing மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : கௌரவச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2022/11/2022111838.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Thiruvannamalai health department jobs 2022 apply soon