scorecardresearch

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
tn govt jobs

தூத்துக்குடி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள வல்லுனர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

மாவட்ட வள வல்லுனர்

கல்வித் தகுதி : Degree in Agriculture/ Veterinary Science/ Horticulture படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : நாள் ஒன்றுக்கு ரூ. 2,000 – 3500 வரை (பணி அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்)

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/12/2022123073.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101, தூத்துக்குடி.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2022/12/2022123073.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Thoothukudi rural development department jobs 2023 apply soon