தமிழக அரசு வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருநெல்வேலி மாவட்ட சத்துணவு திட்டத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tirunelveli Noon meal programme invites application for DEO jobs: தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் ராதாபுரம் ஆகிய ஒன்றியங்களில் சத்துணவு திட்டப் பிரிவில் வட்டார கணினி இயக்குபவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வட்டார கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator)

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

இதையும் படியுங்கள்: மாதம் ரூ1000 உதவித் தொகை; இந்த மாணவிகளுக்கு மட்டுமே: தமிழக அரசு அறிவிப்பு

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு; தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 21 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2022/06/2022062279.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், சத்துணவு பிரிவு, 3ஆவது தளம், கொக்கிரகுளம், திருநெல்வேலி – 9

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.07.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2022/06/2022062279.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tirunelveli noon meal programme invites application for deo jobs