TN 11th Plus One Result 2019 : இந்த ஆண்டிற்கான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த வருடம் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில், 95% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுதப்பட்ட முதல் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இதுவாகும். தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge.tn.nic.in போன்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகளை அவர்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்ச்சி விகிதம்
95% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 98% தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது ஈரோடு மாவட்டம். 97.9% தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.6% தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடம் பிடித்துள்ளது. எப்போதும் போல் முதலிடம் பிடித்த மாணவிகள். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.5% ஆகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.3% என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Live Blog
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டது. 8 லட்சம் மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதினர்.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதம் எவ்வளவு ?
ஈரோடு - 98.03%
திருப்பூர் - 97.97%
கோவை - 97.67%
தூத்துக்குடி - 97.64%
திருநெல்வேலி - 97.59%
விருதுநகர் - 97.41%
ராமநாதபுரம் - 97.33%
நாமக்கல் - 97.33%
மதுரை - 97.03%
திருச்சி - 96.93%
சென்னை - 96.86%
கரூர் - 96.65%
பெரம்பலூர் - 96.63%
கன்னியாகுமரி - 96.44%
திண்டுக்கல் - 96.24%
சிவகங்கை - 96.17%
தஞ்சாவூர் - 95.85%
சேலம் - 95.39%
புதுச்சேரி - 95.09%
புதுக்கோட்டை - 94.89%
உதகை - 94.87%
காஞ்சிபுரம் - 94.5%
திருவள்ளூர் - 94.39%
தேனி - 93.97%
திருவண்ணாமலை - 93.62%
திருவாரூர் - 93.44%
நாகை - 93.09%
காரைக்கால் - 92.96%
அரியலூர் - 92.84%
தர்மபுரி - 91.51%
விழுப்புரம் - 91.21%
கிருஷ்ணகிரி - 90.93%
கடலூர் - 89.76%
வேலூர் - 89.29%
மொழிப்பாடம் (முதன்மை மொழி) - 97.5%, ஆங்கிலம் - 97.6%, கணினி அறிவியல் 98.2%, வணிகவியல் 97.7%, கணக்குப் பதிவியல்97.7%, வரலாறு 95.1% தேர்ச்சி. இயற்பியல் 94.6%, வேதியியல் 95.7%, உயிரியல் 97.1%, கணிதம் 96.9%, தாவிரவியல் 91.1%, விலங்கியல் 93.0%,
தேர்ச்சி விகிதம் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் வாரியாக, 98% தேர்ச்சியுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது ஈரோடு மாவட்டம். 97.9% தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.6% தேர்ச்சியுடன் கோவை மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
https://www.dge1.tn.nic.in/ - இந்த இணைய தளத்திற்கு செல்லவும். அதில் ”HSE ( 1) First Year - Examination Results - March 2019” என்ற ஒற்றை ரிசல்ட் பேஜ் தோன்றும். அதை க்ளிக் செய்தவுடன், மீண்டும் ஒரு பேஜ் தோன்றும்.
அதில் உங்களின் ரெஜிஸ்டர் நம்பர் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடாக தர வேண்டும். பின்னர் சப்மிட்டை க்ளிக் செய்ய உங்களின் தேர்வு முடிவுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடாக கொடுத்து உங்களின் தேர்வு முடிவுகளை 9:30 மணியில் இருந்து பார்த்துக் கொள்ளலாம்.
தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை மட்டுமே காண இயலும். முடிவுகள் 9:30 மணிக்கு காணலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் இன்று மற்றும் நாளை, http://www.scan.tndge.in - இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் இன்று மற்றும் நாளை, http://www.scan.tndge.in - இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
http://www.scan.tndge.in என்ற இணையத்தில், விடைத்தாள்கள் நகல்கள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மார்ச் மாதம் 6ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் மொத்தம் 7278 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,618 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
தலைநகரில் மட்டும் மொத்தம் 156 மையங்களில் 47,305 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
மாற்றுத் திறனாளிகள் 2,700 பேரும், சிறையில் இருக்கும் 78 நபர்களும் தங்களின் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

92.54% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 84.76% அரசுப் பள்ளிகளில் 100% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தினர். அதே போல் தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 1281 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். +2வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை மாவட்டங்கள் வாரியாக அறிந்து கொள்ள :

11ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் தேர்வுமுடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் இன்று காலை 9:30 மணிக்கு காணலாம்.
tnresults.nic.in
dge.tn.nic.in
dge.tn.gov.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
11ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள், தங்கள் தேர்வுமுடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் இன்று காலை 9:30 மணிக்கு காணலாம்.
tnresults.nic.in
dge.tn.nic.in
dge.tn.gov.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மான்யா மற்றும் திவ்ஜோத் கவுர் ஜக்கி என இரண்டு மாணவர்கள் 99.8% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.
சி.பி.எஸ்.இ. - 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற
மே 23ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 94.5% மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றனர். ஜூன் மாதம் 28ம் தேதி, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெற உள்ளது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights