HSC +2 Supplementary Exam : தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தமிழக +2 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று அதன் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தோல்வியுற்ற மாணவர்கள் ஜூன் மாதத்தில் அதற்கான துணைத் தேர்வினை எழுதி +2 தேர்வில் தேர்ச்சி அடையலாம். TN +2 Supplementary Exam 2019 -ற்கான கால அட்டவணை மற்றும் இதர தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TN +2 Supplementary Exam 2019 - நடைபெறும் தேதி
அதற்கான தேதிகள், மட்டும் அட்டவணைகள் விரைவாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ப்ளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் மாதம் 6ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடைபெறும்.
அதே போன்று +1 மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் மாதம் 14ம் தேதி துவங்கி 21ம் தேதி வரையிலும் நடைபெறும். துணை தேர்வு எழுத விண்ணப்பபடிவங்கள் மற்றும் ஹால்டிக்கெட் மற்றும் கால அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க : கன்னியாகுமரி அரசு பள்ளி மாணவர்கள் +2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்
விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை tnresults.nic.in or examresults.net.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.