TN +2 Supplementary Exam 2019 : பிளஸ் 2 துணைத் தேர்வுகள் எப்போது ?

TN HSC +2 Supplementary Exam 2019 : தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை tnresults.nic.in இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

TN HSC +2 Supplementary Exam 2019 : தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை tnresults.nic.in இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN +2 Supplementary Exam 2019 : பிளஸ் 2 துணைத் தேர்வுகள் எப்போது ?

HSC +2 Supplementary Exam : தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தமிழக +2 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று அதன் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தோல்வியுற்ற மாணவர்கள் ஜூன் மாதத்தில் அதற்கான துணைத் தேர்வினை எழுதி +2 தேர்வில் தேர்ச்சி அடையலாம்.  TN +2 Supplementary Exam 2019 -ற்கான கால அட்டவணை மற்றும் இதர தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

TN +2 Supplementary Exam 2019 - நடைபெறும் தேதி

அதற்கான தேதிகள், மட்டும் அட்டவணைகள் விரைவாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ப்ளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் மாதம் 6ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடைபெறும்.

அதே போன்று +1 மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் மாதம் 14ம் தேதி துவங்கி 21ம் தேதி வரையிலும் நடைபெறும்.  துணை தேர்வு எழுத விண்ணப்பபடிவங்கள் மற்றும் ஹால்டிக்கெட் மற்றும் கால அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

Advertisment
Advertisements

மேலும் படிக்க : கன்னியாகுமரி அரசு பள்ளி மாணவர்கள் +2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை tnresults.nic.in or examresults.net.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறியலாம்.

Tamil Nadu School Education Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: