கவுன்சலிங் நிறைவடைய உள்ள நிலையில், பொறியியல் படிக்க விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இன்னும் சில டாப் கல்லூரிகளில் இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. அதாவது 3 சுற்று கவுன்சலிங் முடிவடைந்துவிட்டது. மூன்றாம் சுற்றில் ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்று வருகின்றனர். இதன் பின்னர் துணை கலந்தாய்வு மட்டுமே உள்ளது. இந்த துணை கலந்தாய்வுக்கும் 50000 இடங்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அது சில டாப் க்ளாஸ் கல்லூரிகளில் இன்னும் முக்கிய படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
அந்த வீடியோவில், நிறைய டாப் கல்லூரிகளில் சில படிப்புகளில் மேனேஜ்மெண்ட் இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. எனவே பொறியியல் படிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக டாப் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ படிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் இந்த இடங்களில் சேரலாம். மேனேஜ்மெண்ட் இடங்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்கள் இந்த இடங்களில் சேரலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“