தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான 2 ஆவது சுற்று தொடங்க உள்ள நிலையில், கல்லூரிகளை தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தநிலையில், மாணவர்களுக்கான முக்கிய அறிவுரைகளை கல்வியாளர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். முதல் ரவுண்டில் ஒரு மாணவருக்கு அவர் சாய்ஸ் ஃபில்லிங்கில் கொடுக்காத கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான சாஃப்ட்வேரில் எந்த குறைபாடும் இல்லாத நிலையில், இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுந்தது. விசாரித்தப் பின்னர் தான் அந்த மாணவர் அவரின் பயனர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்ட்டை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இரு தரப்பும் சாய்ஸ் ஃபில்லிங் செய்ததால் ஏற்பட்ட குழப்பதால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு அவர் சாய்ஸ் ஃபில்லிங்கில் கொடுக்காத கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
Advertisment
Advertisements
எனவே, இரண்டாம் சுற்றுக்குச் செல்லும் மாணவர்கள் உங்களது பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை யாரிடம் கொடுக்காதீர்கள். உங்களுக்கு சாய்ஸ் ஃபில்லிங் செய்ய தெரிந்தால் நீங்களே செய்யுங்கள். அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்களுடன் நீங்களும் உடன் இருந்து சாய்ஸ் ஃபில்லிங் செய்யுங்கள்.
அடுத்ததாக, நீங்கள் ஏதேனும் ஒரு கல்லூரிக்குச் சென்று, அங்கு சேர விண்ணப்பித்து, உங்களது பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்திருந்தால், அந்தக் கல்லூரி நீங்கள் கேட்ட கோர்ஸை தவிர, அதே கல்லூரியில் மற்ற கோர்ஸ்களை சாய்ஸ் ஃபில்லிங்கில் முன்னுரிமையாக கொடுத்து உங்களுக்கு கிடைக்கச் செய்யலாம். இதனால் நீங்கள் கேட்ட கோர்ஸ் கிடைக்காமல் போகலாம்.
எனவே பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை யாரிடமும் கொடுக்காதீர்கள். இன்னும் டாப் கல்லூரிகளில் நிறைய இடங்கள் உள்ளதால் கவனமாக சாய்ஸ் ஃபில்லிங் செய்து சரியான கல்லூரியை தேர்வு செய்யுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil