/tamil-ie/media/media_files/uploads/2023/06/counselling.jpg)
கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)
தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், முதல் சுற்றில் டாப் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் 1,45,071 இடங்களுக்கான கவுன்சலிங் தொடங்கியுள்ளது. இதில் முதல் சுற்று முடிவடைந்து 14,227 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: TNEA 2023: என்ஜினீயரிங் அட்மிஷன் ரவுண்ட் 2 கவுன்சலிங் இன்று தொடக்கம்; இந்த தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங் அவகாசம்!
இந்தநிலையில், முதல் சுற்று கவுன்சலிங் எப்படி இருந்தது? டாப் 10 இடங்களை பிடித்த கல்லூரிகள் எவை? என்பது குறித்த தகவல்களை கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். முதல் சுற்றில் 193 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 90%க்கும் மேலான இடங்கள் 3 கல்லூரிகளில் நிரம்பியுள்ளன. 75%க்கும் மேலான இடங்கள் 10 கல்லூரிகளில் நிரம்பியுள்ளன. 50%க்கும் மேலான இடங்கள் 20 கல்லூரிகளில் நிரம்பியுள்ளன. 40%க்கும் மேலான இடங்கள் 28 கல்லூரிகளில் நிரம்பியுள்ளன.
மாணவர்கள் அதிகம் விரும்பிய படிப்புகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளே. எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
இடங்கள் நிரம்பிய அடிப்படையில் டாப் 10 கல்லூரிகள்
- CECRI காரைக்குடி
- எஸ்.எஸ்.என் கல்லூரி, சென்னை
- எம்.ஐ.டி கேம்பஸ் சென்னை
- கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை
- சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
- கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
- தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
- பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோயம்புத்தூர்
- சென்னை இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச்
- பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.