Advertisment

என்ஜீனியரிங் படிக்க விருப்பமா? இந்த திறமைகளை அவசியம் கற்றுக் கொள்ளுங்கள்!

பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு; நீங்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய திறமைகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
Jun 01, 2023 20:36 IST
engineering

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய திறமைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் படிக்க மாணவர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்தநிலையில் பொறியியல் படிக்க விரும்பும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகுதிகளை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் பட்டியலிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை. உத்தரவு

அந்த வீடியோவில், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தாலும், எதிர்கால வேலைவாய்ப்பு நலனைக் கருத்தில் கொண்டு 2 திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒன்று திறனறிதல் (Aptitude Training) மற்றொன்று அடிப்படை நிரலாக்க மொழி (Basic Coding). திறனறிதல் பிரிவில் Aptitude, Logical Reasoning மற்றும் Critical Thinking ஆகியவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். நிரலாக்க மொழியில் C, C++, Java, Python போன்றவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் 2 ஆம் ஆண்டிலே புராஜெக்ட், இண்டர்ன்ஷிப் செய்ய தொடங்கியுள்ளனர். எனவே Aptitude திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியம். அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புக்கான முதல் ரவுண்ட் செலக்சனாக Aptitude தான் உள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்விலும் முதல் நிலை தேர்வில் Aptitude உண்டு.

இதேபோல், Coding திறமையையும் வளர்த்துக் கொள்வது முக்கியம். குறிப்பாக மென்பொருள் துறையில் நுழைய வேண்டும் என்பவர்கள், C, C++, Java, Python ஆகிய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், பொறியியல் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு முன்னரே இந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment