தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், ரேங்க் தொடர்பான மாணவர்களின் குழப்பத்திற்கு இங்கே தெளிவு பெறுவோம்.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பொதுவான ரேங்க் மற்றும் சாதி வாரியான ரேங்க் ஆகிய இரண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்தநிலையில், மாணவர்கள் எந்த ரேங்க் முக்கியம், எதை வைத்து நமக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வது என குழப்பம் அடைந்துள்ளனர். இதற்கு கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
Advertisements
கடந்த ஆண்டு ஒதுக்கீட்டு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை ஒப்பிட்டு பார்க்கும் மாணவர்கள் அதிலுள்ள ரேங்க் குறித்து குழப்பமடைந்துள்ளனர். டி.என்.இ.ஏ வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது ஜெனரல் ரேங்க் தான்.
இந்த ஜெனரல் ரேங்க் என்பது விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது தவிர இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கம்யூனிட்டி ரேங்க் தனியாக வழங்கப்படும். இந்த ஜெனரல் ரேங்க் என்பது உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணை சென்ற ஆண்டின் பட்டியலுடன் ஒப்பிட பயன்படும். கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவது ஜெனரல் ரேங்க் பொறுத்து தான்.
கம்யூனிட்டி ரேங்க் என்பது உங்கள் இடஒதுக்கீட்டு பிரிவில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ள உதவும். அதன்மூலம் நீங்கள் உங்களுக்கு கிடைக்க உள்ள இடத்தை கணிக்கலாம்.
நீங்கள் சாய்ஸ் பில்லிங் முடித்தப் பிறகு, நீங்கள் கொடுத்த சாய்ஸ் பொதுப்பிரிவில் இருந்தால் உங்கள் அந்த ஒசி இடம் கிடைக்கும், ஒசியில் இல்லை என்றால் உங்களுக்கு இடஒதுக்கீட்டு பிரிவில் கிடைக்கும். இதற்காக தான் கம்யூனிட்டி ரேங்க் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil