Advertisment

பி.டெக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்... தமிழகத்தில் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை?

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் படிக்க விருப்பமா? தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News

engineering Student

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் படிக்க மாணவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. இந்தநிலையில், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் படிப்பை வழங்கும் தமிழகத்தில் உள்ள டாப் 10 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் பொறியியல் படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளைப் போலவே கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்ய மாணவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதிலும் கம்ப்யூட்டர் சயின்ஸில் குறிப்பாக ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட படிப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது.

இதையும் படியுங்கள்: TNEA Cut Off: பொறியியல் உத்தேச கட் ஆஃப்; கடந்த ஆண்டை விட 0.5 வித்தியாசம்?

இந்தநிலையில், தமிழகத்தில் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் படிப்பை வழங்கும் டாப் கல்லூரிகளின் பட்டியலை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ட்ரெண்டிங் கோர்ஸான ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் படிப்பை படிக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அதிக ஆர்வம் உள்ளது. இந்த ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கோர்ஸ் இரண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. ஒன்று பி.டெக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், மற்றொன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்). இரண்டும் கிட்டத்தட்ட ஒரே படிப்புதான்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் மாணவர்களின் பெரு விருப்பமாக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் போன்ற கோர்ஸ்கள் உள்ளன. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மார்க்கெட் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. மேலும், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, நிதி, தொழில்சாலை, மருத்துவம், விவசாயம் உள்பட அனைத்து துறைகளிலும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நல்ல வாய்ப்பை வழங்க உள்ளது.

தமிழகத்தில் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் படிப்பை வழங்கும் டாப் கல்லூரிகள்

சென்னை மண்டலம்

10). செயின்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

9). சவீதா இன்ஜினியரிங் காலேஜ் சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

8). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்

7). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

6). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ் சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

5). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

4). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

வழங்கும் படிப்பு: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்

3). மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை (அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ்)

வழங்கும் படிப்பு: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்

2). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

1). வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலூர் & சென்னை

வழங்கும் படிப்புகள்: 1. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ்), 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்) 3. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (டேட்டா சயின்ஸ்)

கோவை மண்டலம்

10). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ் கோவை

வழங்கும் படிப்பு: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்,

9). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ் பெருந்துறை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

8). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

7). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

வழங்கும் படிப்பு: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்,

6). கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை

வழங்கும் படிப்பு: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்

5). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச். கோவை

வழங்கும் படிப்பு: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்

4). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை

வழங்கும் படிப்பு: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ்

3). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை

வழங்கும் படிப்புகள்: 1. ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், 2. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

2). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை

வழங்கும் படிப்பு: 1. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் & மெசின் லேர்னிங்)

1). அமிர்தா விஸ்வ வித்யபீடம், கோவை

வழங்கும் படிப்பு: 1. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment