நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசைப் பட்டியலை அங்கு தெரிந்து கொள்ளலாம்.
பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடம், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
அதே போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ரவணி முதலிடம். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்தனர். பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை 22 முதல் செப்.11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNEA 2024: பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ல் தொடங்கும்; பொதுப் பிரிவு கவுன்சலிங் எப்போது?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 10, 2024 12:07 IST7.5% இடஒதுக்கீடு: பொறியியல் கலந்தாய்வு எப்போது?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22 , 23 தேதிகளில் நடைபெறுகிறது.
-
Jul 10, 2024 11:34 ISTதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 புள்ளி விபரங்கள்
-
Jul 10, 2024 11:33 ISTதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 புள்ளி விபரங்கள்
-
Jul 10, 2024 11:32 ISTதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 புள்ளி விபரங்கள்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024 புள்ளி விபரங்கள்
-
Jul 10, 2024 11:12 ISTபொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதையொட்டி பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை 22 முதல் செப்.11 வரை நடைபெறுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22 , 23 தேதிகளில் நடைபெறுகிறது.
-
Jul 10, 2024 10:42 IST7.5% இட ஒதுக்கீடு: சேலம் மாணவி முதலிடம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ரவணி முதலிடம். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
#Update | அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலில் சேலம் மாணவி ரவணி முதலிடம்.
— Sun News (@sunnewstamil) July 10, 2024
கோவை மாணவி கிருஷ்ணா அனூப் இரண்டாம் இடமும், வேலூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் மூன்றாம் இடமும் பிடித்தனர். https://t.co/S4nsS6QMJw pic.twitter.com/d5EojVZiaK -
Jul 10, 2024 10:41 ISTபொறியியல்: தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு. பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடம், நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடம், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம்.
#BREAKING | பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு.
— Sun News (@sunnewstamil) July 10, 2024
பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடம், நெல்லையைச் சேர்ந்த நிலஞ்சனா இரண்டாம் இடம், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் மூன்றாம் இடம்.#SunNews | #EngineeringCutoff | #Ranking pic.twitter.com/gh00kJ15b2 -
Jul 10, 2024 10:28 ISTதரவரிசைப் பட்டியல் டவுன்லோடு செய்வது எப்படி?
1. TNEA அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம் - tneaonline.org. செல்லவும்
2. அங்கு உங்களது application number மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிடவும்.
3. இதன் பின் submit பட்டன் கொடுத்தால் தரவரிசைப் பட்டியல் காண்பிக்க்ப்படும். -
Jul 10, 2024 10:15 ISTகடந்தாண்டை விட 10% அதிக விண்ணப்ப பதிவு
பொறியியல் கவுன்சிலிங்கிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 10% அதிகமாகும். தமிழகத்தில் சுமார் 470 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1.8 லட்சம் இடங்கள் உள்ளன.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வரும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் வீணாவதைத் தடுக்க பொறியியல் கவுன்சிலிங் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jul 10, 2024 08:32 ISTகவுன்சிலிங் எப்போது?
நடப்பு கல்வியாண்டிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் 3 சுற்றுகளாக கவுன்சிலிங் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டப் பின் கவுன்சிலிங் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jul 10, 2024 08:29 IST1.98 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 98 ஆயிரத்து 853 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே 6-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பப பதிவு தொடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.