தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வின் (TNEA) முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் அதிக முன்னுரிமை கொடுத்த டாப் 20 கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. 12 ஆம் தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங்க்கு அவகாசம் வழங்கப்பட்டது. 13 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் சுற்றின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்: TNEA Counselling Round 1: 269 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை!
இதனிடையே முதல் சுற்று கலந்தாய்வு குறித்த பகுப்பாய்வை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வெளியிட்டுள்ளார். முதல் சுற்று கலந்தாய்வு நிலவரங்களை பார்க்கும்போது, மாணவர்கள் நல்ல பிராண்ட் மதிப்பு, வேலைவாய்ப்புகள், வசதிகள் மற்றும் பல சிறப்புகளைப் பெற்ற கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
அதேநேரம், NIRF தரவரிசை செயல்முறையில் இல்லாத சில கல்லூரிகள் அல்லது மிகவும் குறைவான தரவரிசையில் உள்ள கல்லூரிகள், உயர் தரவரிசையில் உள்ள சில கல்லூரிகளை விட சிறப்பாக செயல்பட்டு இருப்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளது.
மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், அரசு பொறியியல் கல்லூரிகள், பல்வேறு இடங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை டாப்பர்களால் அதிகம் விரும்பப்படவில்லை.
ரவுண்ட் 1 கவுன்சலிங்கில் முதல் 20 விருப்பமான கல்லூரிகள் பின்வருமாறு:
1. எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி – சென்னை</p>
2. CEG வளாகம் – அண்ணா பல்கலைக்கழகம்
3. எம்.ஐ.டி கேம்பஸ் அண்ணா பல்கலைக்கழகம்
4. CECRI காரைக்குடி
5. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
6. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
7. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
8. PSG காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – கோயம்புத்தூர்
9. ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
10. PSG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோயம்புத்தூர்
11. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
12. ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி, சென்னை
13. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, சென்னை
14. லயோலா ICAM பொறியியல் கல்லூரி, சென்னை
15. கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி
16. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை
17. குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
18. ஏ.சி.டெக் கேம்பஸ், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
19. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
20. ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil