தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வின் (TNEA) முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர், ரவுண்ட் 1ல் அதிக மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவு எது என்பது போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. 12 ஆம் தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங்க்கு அவகாசம் வழங்கப்பட்டது. 13 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் சுற்றின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், இந்த ஆண்டு ட்ரெண்டிங்கில் உள்ள பாடப்பிரிவு என்ன? மாணவர்கள் அதிகம் தேர்வு செய்த பாடப்பிரிவுகள் எவை? என்பது குறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
Advertisment
Advertisement
ரவுண்ட் 1ல் டாப் பாடப்பிரிவுகள்
கணினி அறிவியல் (Computer Science)
தகவல் தொழில்நுட்பம் (IT)
ECE
Artificial Intelligence & Data Science
வழக்கமாக, கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் இ.சி.இ இருக்கும். ஆனால் இந்த ஆண்டில், இ.சி.இ பிரிவை பின்னுக்கு தள்ளி ஐ.டி இரண்டாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள புதிய பாடப்பிரிவான செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் இந்த ஆண்டில் மாணவர்களின் அதிக விருப்பத் தேர்வாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எதிர்பார்த்தபடி, சிவில் மற்றும் மெக்கானிக்கலுக்கு முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. சில முன்னனி கல்லூரிகளில் மட்டும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நிரம்பியுள்ளன. CEG வளாகத்தில் கூட தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளுக்கும் முன்னுரிமை குறைவாக இருந்தது. செராமிக், ரப்பர்-பிளாஸ்டிக், ஜவுளி, பெட்ரோலியம் மற்றும் லெதர் போன்ற சிறப்புப் படிப்புகளும் கூட டாப்பர்களால் அதிகம் விரும்பப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil