TNEA Counselling ரவுண்ட் 2; டாப் கல்லூரிகளிலே நிறைய காலியிடங்கள்; இதை கவனியுங்க!
தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் இரண்டாம் சுற்று; டாப் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள்; இப்படி சாய்ஸ் ஃபில்லிங் செய்தால் டாப் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வின் இரண்டாம் சுற்று தொடங்கியுள்ள நிலையில், எந்தெந்த டாப் கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் இரண்டாம் கட்ட கவுன்சலிங்குக்க்கான சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறை தொடங்கியுள்ளது. இந்தநிலையில், முதல் சுற்று முடிவில் நிறைய டாப் கல்லூரிகளில் நல்ல கோர்ஸ்களுக்கான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் அவை எந்த கல்லூரிகள் என்பதைத் தெரிந்துக் கொண்டு, அதற்கேற்ப சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம்.
கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் எந்தெந்த கல்லூரிகளில் காலியிடங்கள் உள்ளன என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் முதல் இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயோமெடிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், இண்டஸ்ரியல், மேனுபாக்சரிங், போன்ற படிப்புகளில் கணிசமான இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை SC, SCA, ST, BCM பிரிவினருக்கானவை. மைனிங், பிரிண்டிங் மற்றும் தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளில் SC, SCA, ST, BCM, MBC, BC, அனைத்து பிரிவினருக்கும் இடங்கள் காலியாக உள்ளது.
அடுத்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் வளாகத்தில் கிட்டத்தட்ட அனைத்து படிப்புகளிலும் அனைத்து பிரிவினருக்கும் இடங்கள் காலியாக உள்ளன.
அடுத்தப்படியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, ஏரோநாட்டிக்கல் போன்ற படிப்புகளிலே SC, SCA, ST பிரிவினருக்கு இடங்கள் காலியாக உள்ளன. மற்றும் சில படிப்புகளில் SC, SCA, ST, BCM பிரிவினருக்கு இடங்கள் காலியாக உள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புகளில் அனைத்து பிரிவினருக்கும் அனைத்து இடங்களும் காலியாக உள்ளன.
டாப் தனியார் கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகளை தவிர, பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் SC, SCA, ST, BCM பிரிவினருக்கு முக்கிய பாடப்பிரிவுகளிலே காலியிடங்கள் உள்ளன.
இந்த ஆண்டில் மாணவர்கள் அதிகம் விரும்பும் கல்லூரியான எஸ்.எஸ்.என் கல்லூரியில், SC, SCA, ST, BCM பிரிவுகளுக்கு பெரும்பாலான பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
இதேபோல் பெரும்பாலான டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் நிறைய உள்ளதால், இரண்டாம் ரவுண்டில் கலந்துக் கொள்பவர்கள் நன்றாக ஆராய்ந்து சாய்ஸ் ஃபில்லிங் செய்தால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். குறிப்பாக SC, SCA, ST மாணவர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து கல்லூரிகளும் அனைத்து பாடப்பிரிவுகளிலும் காலி இடங்கள் உள்ளன. BCM, MBC, BC பிரிவினருக்கு ஒரு சில டாப் கல்லூரிகளில் டாப் பாடப்பிரிவுகளைத் தவிர பிற இடங்கள் காலியாக உள்ளன.
எனவே, மாணவர்கள் பாடப்பிரிவை விட கல்லூரிக்கு முக்கியத்துவம் அளித்து சாய்ஸ் ஃபில்லிங் செய்தால், சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.