தமிழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு முடிந்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவு நடைபெற்று முடிந்தது. இதில் 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.87 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, 1.55 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.
இந்நிலையில் சுமார் 2 லட்சம் பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு எனக் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள: TNEA Rank List 2024 Live Updates: பொறியியல் படிப்பு: கடந்தாண்டை விட 10% அதிக விண்ணப்ப பதிவு
இந்த தரவரிசை பட்டியல், இன்று (ஜூலை 10) தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலின், tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. அதே போல் இன்றைய தினம் கவுன்சிலிங் தேதி உள்பட மற்ற விவரங்களும் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 450-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“