scorecardresearch

சென்னை தியாகராஜா கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; சென்னை தியாகராஜா கோயிலில் 12 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை தியாகராஜா கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை, திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஓட்டுனர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சென்னை ராணுவ வாகன ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

தபேதார்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

உதவி மின் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மின்/ மின் கம்பியாளர் (Electrical/ Wireman) பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

வேதபாராயணம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேதபாட சாலையில் இருந்து அதன் தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

உதவி சுயம்பாகம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோயிலின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

உதவி பரிச்சாரகம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோயிலின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவுத் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

உதவி சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவுத் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,900 – 21,500

துப்புரவாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 4,200 – 12,900

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/81/704/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 19.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/81/704/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnhrce chennai thiyagaraja temple recruitment 2022 apply soon