Advertisment

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; தருமபுரி உதவி ஆணையர் அலுவலகத்தில் 7 காலியிடங்கள்; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tn-hrce-jobs

இந்துசமய அறநிலையத்துறை வேலை வாய்ப்பு

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையில் தருமபுரி உதவி ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சென்னையில் மத்திய அரசு வேலை; 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/ MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/161/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமண மண்டப வளாகம், பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம் – 636701.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/161/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Dharmapuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment