Advertisment

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samayapuram temple jobs

திருச்சி சமயபுரம் கோயில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி விடுதிக் காப்பாளர் மற்றும் சமையலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Advertisment

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிங்க!

விடுதிக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ. 300

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://samayapurammariamman.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621112.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://samayapurammariamman.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment