scorecardresearch

திருச்சி திருவானைக்காவல் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்!

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் 7 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

Thiruvanaikaval temple
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் கோயிலில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர் பெருக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!

உதவி மின்பணியாளர் பணிக்கு எலக்ட்ரிக்கல் துறையில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். காவலர், பெருக்குபவர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தட்டச்சர் பணிக்கு மாதம் ரூ.18,500-58,600 சம்பளம். இதேபோல் உதவி மின்பணியாளர் ரூ.16,600-52,400, காவலர் ரூ.15,900-50,400, பெருக்குபவர் ரூ.15,900-50,400 சம்பளம் வழங்கப்படும்.

https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=25706  மற்றும் https://hrce.tn.gov.in//hrcehome/index.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். திருவானைக்கோவிலில் உள்ள அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தைப் பெற்று, விண்ணப்பத்தை அஞ்சலிலும் அனுப்பலாம், நேரில் அலுவலகத்திற்கு சென்றும் அளிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண், மற்றும் – பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620005 என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள் பின் வருமாறு; பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல், ஆதார் அட்டை நகல், இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்று நகல், கல்வி சான்று நகல் (கலம் 11 மற்றும் 12 ல் உள்ளவாறு), நன்னடத்தைச்சான்று (கலம் 14- ல் உள்ளவாறு), நன்னடத்தைச்சான்று (கலம் 15-ல் உள்ளவாறு), அனுபவ சான்று நகல், சுயவிலாசமிட்ட ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை ஒன்று. விண்ணப்பிக்க கடைசி தேதி 11-05-2023 ஆகும்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnhrce trichy thiruvanaikaval temple jobs 2023 apply soon

Best of Express