Advertisment

குரூப் 4, 7பி, 8 தேர்வர்கள் உடனே இதை செய்யுங்க... TNPSC முக்கிய அறிவிப்பு!

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு; சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்வது அவசியம்

author-image
WebDesk
Jul 04, 2022 17:41 IST
Tamil news

Tamil news updates

TNPSC announces re upload certain documents to aspirants: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கான தேர்வையும் வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ICF Jobs; சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 876 பணியிடங்கள்; 10th, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

குரூப் 4 பதவிகளுக்கான விண்ணப்பச் செயல்முறை முடிவுற்று, வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்தநிலையில், குரூப் 4 பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, குரூப் 4 பதவிக்கு விண்ணப்பிக்கும்போது பதிவேற்றிய சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு பெரும்பாலானோர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றுகளை பதிவேற்றியிருப்பர்.

இந்தநிலையில், விண்ணப்பதாரர்கள் மீண்டும் அந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ் பதிவேற்றவதை குறிப்பிட்ட சில விண்ணப்பதாரர்கள் மீண்டும் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று, நிரந்தரப் பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, உள் நுழைய வேண்டும்.

அங்கு டாஷ்போர்டில், குரூப் 4 PSTM என்பதை கிளிக் செய்து, மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். அதே நேரம் இந்த டாப், இல்லாமல் PSTM Documents என்று மட்டும் இருந்தால், பதிவேற்றம் செய்ய தேவையில்லை.

அதேநேரம், குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கு, நிரந்தரப் பதிவில் Current Application என்ற டாப்-பில் View Documents என்பதை கிளிக் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் பதிவேற்ற வேண்டும். இந்தப் பதவிகளில் சில விண்ணப்பதாரர்களுக்கு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, சாதிச் சான்றிதழ், தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்ற செய்ய வேண்டியிருக்கும். எனவே சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் 28.08.2022 க்குள் இந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tnpsc Group4 #Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment