டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி காவல் பிரிவு இதுவரை 21 பேர்களை கைது செய்துள்ளது. இந்த முறைகேடு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சித்தாண்டியை நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கும், வேறு பலருக்கும் இந்த சித்தாண்டி டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்களை முன்கூட்டியே கொடுத்திருக்கிறார். மேலும், விடைத்தாள்களில் முறைகேடாய் விடைகளை மாற்றியும் அமைத்திருக்கிறார்.
சித்தாண்டியின் மனைவி, மற்றும் இரண்டு சகோதரர்கள் டிஎன் பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மனைவி சண்முகப்பிரியா மாநிலத்தில் 5 வது இடம், சகோதரன் வேல்முருகன் மாநிலத்தில் 3 வது இடம், மற்றொரு சகோதரன் கார்த்தி மாநிலத்தில் 6 வது இடம்.
குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: மாநிலத்தில் 3-வது இடம் பிடித்தவர் கைது
சித்தாண்டி கைது விவிரம்: சில நாட்களுக்கு முன்பு தலைமறைவாக இருந்த சித்தாண்டி சென்னையில் ஒரு மருத்துவமையில் மாறுவேடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிபிசிஐடி காவல் பிரிவு அவரை கைது விட்டதாகவும் அனைத்து ஊடகங்களிலும் தகவல் வெளியாகின. ஆனால், சிபிசிஐடி காவல் பிரிவு இந்த தகவலை உறுதி படுத்தவில்லை.
இந்நிலையில், சித்தாண்டி ஒரு வாரத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டு, ரகசிய அறையில் காவல்துறையின் அதிரடி விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்திருகின்றன். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உன்மைகள் வெளியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சித்தாண்டியின் நடத்திய விசாரணையில் முறைகேடாய் பணியில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை சிபிசிஐடி காவல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்த பணிகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி
தற்போது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வ விசாரணை துவங்கி இருப்பதால் பல உண்மைகள் வெளியில் வரலாம் என்று நம்பப்படுகிறது. சித்தாண்டி வெறும் இடைத்தரகர், தனது குடும்பத்திற்கு உதவியுள்ளார் என்பதை நம்ப சிபிசிஐடி காவல் பிரிவும் தயாராக இல்லை. இந்த முறைகேடு பின்னணியில் யார் இயக்குகிராகள்?, இயக்குகிராகள்? தன்மை என்ன? அரசியல் பின்புலன் என்ன? போன்ற கோணங்களில் காவல் துறை யோசித்து வருகின்றது.
ஜெயக்குமார் பற்றி:
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கினை நேற்று போலீசார் முடக்கியுள்ளனர். தலைமறைவாக இருக்கும் ஜெயக்குமாரை கண்டுபிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான நிலையம் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களை கண்காணித்து வரும் காவல் துறையினர், ஜெயகுமாரின் டிஜிட்டல் தடங்களையும் கண்காணித்து வந்தனர்.
மேலும், ஜெயக்குமாரை கண்டுபிடித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி காவல் பிரிவு ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
