2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு முறைகேடுகலைப் போன்றே 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்வர்களிடம் இரண்டு பேனாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
குரூப் II தேர்விலும், முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்வர்களுக்கு தேர்வு மையங்களுக்கு செல்லும்முன் இரண்டு பேனாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று சிறப்பு பேனா, மற்றொன்று சாதாரண பேனா. சாதாரண பேனா மூலம் விடைத்தாளில் கேட்கப்படும் பதிவு எண், கையெழுத்து போன்றவைகளை பூர்த்தி செய்திருக்கின்றனர். மற்றொரு பேனாவின் மூலம் கேள்வி பதில்களை பூர்த்தி செய்திருக்கின்றனர். இந்த சிறப்பு பேனா மையால் எழுதிய விடைகள் சில மணி நேரத்தில் மறைந்து விடும்.
இன்றைய முக்கிய செய்திகள் live அட்டட்ஸ்
இந்த விடைத்தாள்கள் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு வரும் வழியில், வேறொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு, சரியான பதில்கள் பதிவிடப்பட்டிருகின்றன.
குரூப் - 4 தேர்வு முறைகேடுகளில் மூளையாக இருந்து செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த எஸ்.ஜெயகுமார், குரூப்- IIA தேர்வு முறைகேடுகளிலும் முக்கிய பங்கு வகித்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எஸ்.ஜெயகுமாரின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருபதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: மாநிலத்தில் 3-வது இடம் பிடித்தவர் கைது
ஜெயக்குமாரைக் கண்டுபிடிக்க சிறப்பு குழுக்கள் பல யூகங்களை கடைபிடித்தி வருகின்றன. உள்நாட்டு விமான நிலையம் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களை கண்காணித்து வரும் காவல் துறையினர், ஜெயகுமாரின் டிஜிட்டல் தடங்களையும் கண்காணித்து வந்தனர். சில கல்வித் துறை அதிகாரிகளுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஜெயகுமாரின் கார் ஓட்டுநரின் மனைவி உட்பட மேலும் 3 பேரை சிபி-சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
எஸ்.ஐ சித்தாண்டி:
மேலும், இந்த முறைகேடுகளில் மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவலர் சித்தாண்டியும், அவரின் மனைவி பிரியாவின் வங்கி கணக்குகளையும் சிபிசிஐடி முடக்கியுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி
தேடப்படும் சித்தாண்டி, திருவராஜ் (குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்) மற்றும் வேல்முருகனுக்கு (குரூப் II-ஏ தேர்வில், மாநில அளவில் 3-வது இடம் பிடித்தவர்) முறைகேடுகளுக்கு உதவியுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தொடரும் கைது:
காஞ்சிபுரம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பி.வடிவு, பட்டினபாக்கம் பதிவுத் துறையில் பணிபுரியும் ஞானசம்மந்தன், செங்குன்றம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் எம்.ஆனந்தன் ஆகியோரை நேற்று சிபிசிஐடி காவல்பிரிவு கைது செய்துள்ளது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் எம். முத்துகுமார், முறைகேடுகளின் மூலம் தனது மனைவியை டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைய வைத்திருகிறார் என்பதை கண்டறிந்த காவல் துறையினர் அவரையும் கைது செய்துள்ளது.